2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்

Sudharshini   / 2015 மே 31 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிவாணி ஸ்ரீ

காவத்தை கொட்டகெத்தன பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை என கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று (31) காவத்தை நகரில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

காவத்தை கொட்டகெத்தன கொலை சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைதுசெய்து, உண்மை சம்பவங்களை வெளிப்படுத்த வேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்தனர்.

இதில் ஜே.வி.பியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் புஸ்பகுமார மற்றும் நிவித்திகலை தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட ஜே.வி.பி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காவத்தை நகரை சுற்றி பொலிஸ் மற்றும் விசேட பாதுகாப்பு அதிரடிப் படையினர் தொடர்ந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .