Gavitha / 2015 ஜூன் 01 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கவுள்ளதாக, பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தோட்டங்களில் வாழும் மக்களுக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொள்வதற்காக ஏழு பேர்ச் காணி வழங்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் தமது அரசின் 03ஆவது அமைச்சரவை கூட்டத்துக்கு இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களது ஒத்துழைப்புடன் இத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்ததாகவும் கூறிய அமைச்சர், தற்போது தோட்ட மக்களுக்காக ஏழு பேர்ச் காணி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பதுளை, நுவரெலியா, கண்டி ஆகிய பிரதேசங்களில் தோட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்த போது, அவர் மலையக மக்களுக்கு 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக பண உதவி வழங்குவதாக உறுதி தந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
22 minute ago
29 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
29 minute ago
33 minute ago