Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 01 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
நோர்வூட் போட்ரி தோட்டத்தில் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அத்தோட்டத்தில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மலையகத்தில் இடம்பெற்று வரும் தொடர் குளவி கொட்டு சம்பவங்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, நோர்வூட் போட்ரி தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நோர்வூட் போட்ரி தோட்டத்தில் இன்று காலை 15 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன்; அதில் 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்தே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தில் குளவி கூடுகள் அதிகமாக காணப்படுவதாகவும் இவற்றை அகற்றுமாறு தோட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கூறியும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 3 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தோட்ட அதிகாரியான எஸ்.காவிந்த ஆராய்ச்சி, தோட்டத்தில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எப்பதுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளிகளுக்கும் நாள் சம்பளத்தை வழங்கவுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago