Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 03 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு செலுத்த வேண்டிய 61 இலட்சம் ரூபாயை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்கு இதுவரை செலுத்தாமையால் சபை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதன் தலைவர் ஆனந்த ஜயவிலால் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கஷ்ட பிரதேசத்திலுள்ள பாதைகள், பாலங்கள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கென நிதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் அதன் பிரகாரம் ஒப்பந்தக்காரர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதிலும் அவற்றுக்கு செலுத்த வேண்டிய 61 இலட்சம் ரூபாயை இதுவரை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் செலுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒப்பந்தக்காரர்களுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருப்பது பிரதேச சபை என்பதால், அவர்கள் தம்மிடம் பணத்தை கோருவதாகவும் அவர்களில் ஒருவர் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் ஜயவிலால் குறிப்பிட்டார்.
இப்பணத்தை பெற்றுத்தருமாறு மாகாண சபைகள் மற்றம் உள்ளூராட்சி மன்ற அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்தள்ளதாகவும் பணம் கிடைக்க பெற்றவுடன் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago