Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 03 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
'வேலைத் தெரியாத டாசன்கள் தேர்தலுக்கு முன்பு என்னை சிறையில் அடைக்க முற்படுகின்றார்கள். நான் மூன்று மாதம் சிறையில் இருந்தவன். பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடுகட்ட முடியாது. நான் பயந்தவன் அல்ல' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, கலவான கொஸ்வத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
நூறுநாள் திட்டத்தை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் நூறு பொய்களை கூறியுள்ளது. வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நான் கொள்ளையடித்துள்ளதாக எனக்கெதிராக குற்றம் சுமத்துகின்றனர். அந்த பணத்தை நான் மெதமுள்ளைக்கு கொண்டு செல்லவில்லை.
அதில் பாதியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலின் பதவியை பாதுகாத்து கொடுப்பதற்காக ஸ்ரீகொத்தாவுக்கு முன்பாக வீதியை உடைத்து அதை காபட் செய்து கொடுத்தேன். இதனை அவர்கள் மறந்துவிட்டார்கள்' என அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இருந்த எமது அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது. அரச சேவையாளர்களுக்கு மோட்டார் வண்டி வழங்கியது. தற்போது அந்த வேலைத்திட்டங்கள் எங்கே? தேயிலை இறப்பர் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறினார்கள். தற்போது அவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதா?
தேயிலைக்கு 80 ரூபாவும் இறப்பருக்கு 300 ரூபாவும் உயர்த்தப்படவுள்ளதாக கூறினார்கள். தற்போது அவர்கள் கூறியது நிறைவேற்றப்பட்டுள்ளதா? மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செயதது. இதை மக்கள் தற்போது புரிந்த வண்ணம் உள்ளார்கள்.
எமது நாட்டின் மத்திய வங்கி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் எமது நாட்டை சேர்ந்தவர் அல்ல. அவர் சிங்கப்பூரை சேர்ந்தவர்.
மத்திய வங்கி தலைவராக நியமிக்கப்படுபவர் எமது நாட்டின் உரிமையை பெற்றிருக்க வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் இலங்கை நாட்டின் உரிமை இல்லாத ஒருவர். எனவேதான் அவர் மத்திய வங்கி தலைவர் பதவியை ஏற்பதற்காக சத்தியபிரமானம் செய்யவில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
55 minute ago