2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உதவியாளர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் கொழும்பில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்திலல் வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

இதன்போது, 370 பேருக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இதன்படி ஊவா மாகாணத்தில் 102 பேருக்கும் மத்திய மாகாணத்தில் 173 பேருக்கும் தென்மாகாணத்தில் 8 பேருக்கும் சப்ரகமுவ மாகாணத்தில் 72 பேருக்கும் மேல் மாகாணத்தில் 15 பேருக்குமாக மொத்தம் 370 பேருக்கான நிமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 963 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

மிகுதியாக உள்ள நியமனங்களை வழங்கும் வகையில் எதிர்வரும் 9ஆம் திகதி இரத்தினபுரியிலும் 10ஆம் திகதி பதுளையிலும் 11ஆம் திகதி கண்டி, நுவரெலியா பகுதியிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்று, அவர்களுக்கான பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனங்களை இம்மாத இறுதிக்குள் வழங்குவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் ஊவா மாகாணத்தில் 294 பேருக்கும் மத்திய மாகாணத்தில் 292 பேருக்கும் தென்மாகாணத்தில் 43 பேருக்கும் சப்ரகமுவ மாகாணத்தில் 306 பேருக்கும் மேல் மாகாணத்தில் 25 பேருக்கும் வட மேல் மாகாணத்தில் 3 பேருக்குமாக இன்னும் 963 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. இவை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .