2025 ஜூலை 02, புதன்கிழமை

எந்த கூட்டணியில் சேர்வது; தீர்மானமில்லை: இ.தொ.கா

Kogilavani   / 2015 ஜூன் 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

'எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பதை நாடாளுமன்றம் கலைத்த பின்னரே தீர்மானிக்க முடியும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கரஸுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
'நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் இ.தொ.கா. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடும் என்பது தொடர்பில் பலவாறு பேசப்பட்டு வந்தது. இவ்விடயத்தில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அரசியல் சூழ்நிலைகளை அவதானித்த பின்னரே எந்த கட்சியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை அறிவிப்போம்' என தெரிவித்தார்.

'இந்திய வம்வாளி மக்களை பிரதிநிதித்துவப்படும் வகையில் தற்போதைய அரசியலமைப்பு பேரவையில் எவரும் உள்வாங்கப்படவில்லை. கடந்த அரசியலமைப்பு பேரவையில் ஒருவர் இருந்தார். ஆனால், இம்முறை எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்து கொண்டு சென்றோம். இந்திய வம்சாவளி மக்கள்; எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அறிந்த ஒருவராக முன்னாள் அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் ஸ்தாபகருமான பி.பி.தேவராஜா உள்ளார். இவர் தற்போது அரிசியலில் ஈடுபடவில்லை. பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியினரை பிரதிநிதித்துவப்படும் ஒருவராக பி.பி.தேவராஜா உள்வாங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரிவித்துள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .