Sudharshini / 2015 ஜூன் 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நியூவெளி பகுதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டப்பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டர் சைக்கிளுடன் நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


30 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
48 minute ago