Sudharshini / 2015 ஜூன் 14 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வைத்தியசாலை கட்டடத்தை உடனடியாக திறக்ககோரி வைத்தியசாலை வளாகத்தில் இன்று (14) பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கரிட்டாஸ் கண்டி செட்றிக் நிறுவனத்தின் ஆலோசனைகமைய நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமிய தலைவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், சர்வமத தலைவர்களும் ஒன்றியத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுன் கட்டப்பட்ட இக்கட்டடமானது, நீண்டகாலமாக திறக்கப்படாமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் உடனடியாக திறப்பதுக்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago