Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்க பொதுசெலாளர் ஆறுமுகம் முத்துலிங்கம் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்படுகின்றன. இதுதொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்படுகின்ற போதிலும் திருடர்கள் கண்டுப்பிடிக்கப்படுவதில்லை. கடந்த ஆட்சியில் இச்செயற்பாடுகள் உக்கிரமாக இடம்பெற்று வந்தன' என்றும் அவர் தெரிவித்தார்.
பண்டாரவளையில் இருவேரு பகுதிகளிலுள்ள ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் என்பன திருடப்பட்ட சம்பவத்தை கண்டித்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'புதிய நல்லாட்சியிலாவது இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
திருடர்கள் எந்த தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசு அசமந்து போக்கை கடைப்பிடிக்குமானால் மக்களுடைய வெறுப்புக்கும் அதிருப்;திக்கும் ஆளாகவேண்டி ஏற்படும்' என்றார்.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago