Sudharshini / 2015 ஜூன் 14 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழும் குழியிலிருந்து மீடக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளையும் இன்று (14) மாலை 6 மணியளவில் விசேட அதிரடி படையினர் வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் மணிக்கல் கல் அகழ்வில் நேற்று சனிக்கிழமை (13) தொழிலாளர்கள் ஈடுபட்டடிருந்த போதே கை குண்டுகளை இனங்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மாணிக்க கல் அகழ்விற்காக செப்பல்டன் தோட்ட பகுதியை தொழிலாளர்களுக்கு அரசு குத்தகை அடிப்படையில், 61 பகுதிகளாக பகிர்ந்தளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago