Menaka Mookandi / 2015 ஜூன் 19 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் வகையிலும் பயணிகளுக்கான சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கிலும் விசேட கலந்துரையாடலொன்று நுவரெலியா பலநோக்குகூட்டுறவு விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை நடைபெற்றது.
மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சக்தி எரிபொருள் சக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் எற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் மத்திய மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன, அமைச்சின் செயலாளர், நுவரெலியா மாவட்ட தனியார் பஸ் பொறுப்பதிகாரி பஸ்நாயக்க உட்பட பலர் கலந்துகெண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் நேரசூசி அமைத்தல் தண்டப்பணம் அறவிடலில் ஏற்படும் பிரச்சினைகள், பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்திக்கும் வகையில் கடன் உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி கலந்துரையாடலில் ஹட்டன், மஸ்கெலியா, நுவரெலியா, வெலிமட ஆகிய பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago