Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
இலங்கை கல்விச் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் அதிபர் தரம் 111க்கான போட்டி பரீட்சையை முன்னிட்டு நடத்தப்பட்ட இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இலவச செயலமர்வும் பதுளை அல் அதான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது.
சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக பதுளை வலய உதவி கல்வி பணிப்பாளர் வீ.கருணாகரன் கலந்துகொண்டார்.
வளவாளர்களாக சம்மேளனத்தின் ஆலோசகரும் ஹட்டன் வலய உதவி கல்வி பணிப்பாளருமான பி.ஈ.ஜீ சுரேந்திரன் கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் லெனின் மதிவாணன், தேசிய கல்வி நிறுவக தலைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர ஆலோசகர் பீ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


10 minute ago
31 minute ago
32 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
32 minute ago
49 minute ago