Princiya Dixci / 2015 ஜூன் 23 , மு.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (21) நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தீர்வு எட்டப்படாத நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை காலை கொழும்பு முதலாளிமார் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது.
இப்பேச்சு வார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் உற்பத்தியுடனான சம்பள உயர்வு பற்றிய புதியதொரு திட்டத்தை முன்வைத்தது.
இதனை மறுத்த இ.தொ.கா., நியாயமான சம்பள உயர்வை காலம் தாழ்த்தாது உடன் பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியது.
இந்நிலையில், அத்தீர்மானம் தொடர்பில் அனைத்து தோட்ட கம்பனிகளும் நிர்வாக சபைகளுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்றை பெற்றுத்தருவதாக நிறைவேற்று அதிகாரிகள் வாக்குறுதியளித்ததையடுத்து இக்கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
28 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
46 minute ago