Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
பெரிய வெங்காய விதை நாற்றுமேடைகளில் பரவிவரும் இனங்காணமுடியாத வைரஸ் காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டின் பெரிய வெங்காய உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்படும் என்று தம்புள்ளை வர்த்தக மையத்துக்கு பெரிய வெங்காயம் விநியோகிக்கும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வைரஸால் மாத்தளை மாவட்டத்தில் நாவுல மற்றும் லெனடோரா போன்ற பெரிய வெங்காய நாற்று வகைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.
பொதுவாக பெரிய வெங்காய நாற்றுகள் தனியார் துறை உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பின்னரே நடப்படும். பெரும்போக வெங்காய உற்பத்திக்காக தயாராகிக்கொண்டிருக்கும் வெங்காய உற்பத்தியாளர்கள் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் காரணமாக பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.
தனியார் துறை உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காய நாற்றுக்களை 20 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்வோர் தற்போது மிகப்பெரிய நட்டமடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
வைரஸ் தொடர்ந்து பரவுவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுமாயின், தம்புளை வர்த்தக நிலையத்துக்கு விநியோகிக்கப்படும் பெரிய வெங்காயம் முற்றுமுழுதாக முடக்கப்படும் என்றும் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
விவசாய திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்ட இரசாயன உரங்களை பயன்படுத்தியும் இந்த வைரஸ் பரவி வருகின்றது என்று தெரிவித்த வெங்காய உற்பத்தியாளர்கள் சரியாக சோதனைகள் மேற்கொள்ளப்படாமல் வெங்காய நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுவதே இந்த வைரஸூக்கான காரணம் என்றும் தெரிவித்தனர்.
10 minute ago
31 minute ago
32 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
32 minute ago
49 minute ago