Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
'வடக்கு, கிழக்கு மக்களே கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை தோல்வியடை செய்தனர். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வித மக்கள் ஆணையும் தேவையில்லை' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
'புதிய அரசு நூறுநாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது. இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன? எதுவும் நடக்கவில்லை. எங்களை பழி வாங்குவது மட்டுமே நடந்து' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கண்டி, பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'மத்திய வங்கி ஆளுநர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருந்த பிரேரணைகளுக்கு பயந்தே நாடாளுமன்றத்தை கலைத்தனர். புதிய அரசு எங்களை திருடர்கள் என்று கூறியது. இந்த அரசு நியமித்த மத்திய வங்கி ஆளுநர் ஒரு நாளில் நாட்டுக்கு 60 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் பெறப்பட்ட கொமிஸ் தொகை மட்டும் ஒன்றரை பில்லியன் ரூபாயாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
'நான் போதை பொருள் வியாபாரத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஒன்பது வருடகால ஆட்சியில் ஒரு எத்தனோல் அனுமதி பத்திரமாவது வழங்கினேனா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.
புதிய அரசு நூறு நாள் ஆட்சியில் 28 எத்தனோல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கி உள்ளது' என்றார்.

7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago