Princiya Dixci / 2015 ஜூலை 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'மூன்றாவது கண்ணால் உலகைக் காண்போம்' ஊடக பயிற்சிக் கருத்தரங்கு, எதிர்வரும் 9ஆம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை இரத்தினபுரி பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
புகைப்படம் பிடித்தல், ஒளிப்பதிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, நிகழ்ச்சி தொகுப்பாளர், அறிக்கையிடல், சினிமாத்துறை மற்றும் ஏனைய ஊடகத்துறைகள் தொடர்பில் இப்பயிற்சிக் கருத்தரங்கில் ஆழமாக விளக்கமளிக்கப்படவுள்ளன.
ஆளணி மற்றும் தொழில்வாயப்பு திணைக்களமானது, இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் தொழிற் சேவைகள் மத்திய நிலையத்தினூடாக வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் ஊடகத்துறை தொழில்வாய்ப்பை பெறுவதற்கான எண்ணத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலும் இப்பயிற்சிக் கருத்தரங்கில் விளக்கமளிக்கப்படவுள்ளன.
மேலும், சுயதொழில்களில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கான வியாபார அறிவை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago