Kogilavani / 2015 ஜூலை 21 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
மலையக தேசிய முன்னணி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அதன் தலைவரும் பொதுச்செயலாளருமான கலாநிதி ஆதிரிஷி செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று (20) நடைபெற்ற தொழிற்சங்கத்தின் உயர்மட்ட பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.
'நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து ஐ.தே. கட்சியை ஆதரிப்பதற்கு ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெற செய்தோம்.
அதேபோல் மலையக மக்களின் நாடி துடிப்பை அறிந்து எமது மக்கள் விரும்புகின்ற தலைவர்களான அமைச்சர்களான வே.இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், தலைவர் மனோ கணேசன் ஆகிய தலைவர்களை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக ஐ.தே.கட்சியை வெற்றியடையச் செய்வோம்' என்றார்.
'தற்போது மலையகத்தில் இந்த தலைவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட வெற்றியாகும். இதனை மேலும் உறுதிப்படுத்த இன்று முதல், தேர்தல் பிரசாரங்களில் ஈடுப்படவுள்ளோம்' என்று அவர் கூறினர்.
நாடாளுமன்ற தேர்தலில் மலையக தேசிய முன்னணி போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி இருந்தமையும் குறிப்பிடதக்கது. தற்போது அதிலிருந்து மலையக தேசிய முன்னணி விலகி தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு ஆதரித்து. ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026