Kogilavani / 2015 ஜூலை 21 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுஜிதா
பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு 6,000 ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டபோதும், ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவு 4,600 ரூபாயே வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் உதவியாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக கடந்த மே 19 முதல் மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 6,000ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவே நியமனக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மே மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டபோதும் ஜூன் மாதம் 8 ஆம் திகதியே இவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இந்நிலையில், முதல் மாத சம்பளத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர், வி.இராதாகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ஆசிரியர் உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கேட்டு பதிலளிப்பதாகவும் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 10,000 ரூபாயாக அதிகரிகப்பதற்கான மகஜரொன்றையும் அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
09 May 2026