Kogilavani / 2015 ஜூலை 22 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மலையக இளைஞர்,யுவதிகளுக்காக 50,000 தொழில்வாய்ப்புகள் வழங்குதவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் கல்வி இராஜங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அடுத்து அமைய போகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் ஊடாக மலையக இளைஞர், யுவதிகளுக்காக ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லிந்துலை, நாகசேனையில் திங்கட்கிழமை(20) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்குதொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக இளைஞர், யுவதிகளுக்காக ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதற்கான வேலைத் திட்டங்களை தற்பொழுதே முன்னெடுக்கின்றார். இதன் முதற்கட்டமாக குருநாகல் மற்றும் குளியாப்பிட்டி போன்ற பகுதிகளில் கார் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகளுக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளார்.
மலையகத்தில், நான்கு வலயங்கள் பிரிக்கப்பட்டு வெளிநாடுகளோடும் தனியார் நிறுவனங்களோடும் இணைந்து தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அதனூடாக எமது மலையக இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதுமாபெரும் சந்தர்ப்பமாகும். எனவே, நாம் இந்த தேர்தலை சரியாக பயன்படுத்தி சரியானவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.
'எமது, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு படிப்படியாக பெருகி வருகின்றது. இன்று எம்முடன் பல அமைப்புக்கள் இணைந்து செயற்பட முன்வந்துள்ளன. இந்த கூட்டணி மூலம் மலையகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என மக்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்த கூட்டணியின் வெற்றி வெறுமனே வேட்பாளர்களின் வெற்றியல்ல. அது மலையகத்தினதும் அதன் தூண்களாக இருக்கும் இளைஞர் யுவதிகளினதும் வெற்றியாகும்' என்றார்.
'இன்று மலையகத்திலிருந்து சென்று வடக்கு, கிழக்கு பல்கலைகழகங்களில் கல்வி பயின்றுவரும் மலையக மாணவர்கள் எமது வெற்றிக்காக பாரிய உதவிகளை செய்து வருகின்றார்கள்.
அவர்கள் இணையத்தளங்களுடாகவும் சமூக வலைத்தளங்களுடாகவும் தேர்தல் பிரசாரங்களை பாரியளவில் முன்னெடுத்து வருகின்றார்கள். இதனை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இவர்களை போல அனைத்து இளைஞர், யுவதிகளும் முன்வர வேண்டும்.
நல்ல தொழில் வாய்ப்பை பெற்;றுக்கொள்ள வேண்டும். சொந்த வீடு காணிகளில் வாழ வேண்டும். ஏனைய சமூகங்களை போல இந்த நாட்டில் சம அந்தஸ்தும் சம கௌரவமும் வழங்கப்படவேண்டும். இதுவே எனது கனவாகும்' என அவர் மேலும் கூறினார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026