Kogilavani / 2015 ஜூலை 22 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹொமட் ஆஸிக்
தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் மத்தியில் வந்து வாக்குகேட்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின், கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் வரும் சிலர் வாக்குறுதிகளை வழங்குவதுடன் வாக்குகளையும் பெற்று செல்கின்றனர். அதன்பின்பு அவர்களை காண முடியாது. அவ்வாறானவர்களுக்கு வாக்களித்து மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைய வேண்டாம்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் வெற்றியடைந்த பின்பு இவர்களது முகத்தில் ஒரு புன்னகையைக்கூட காண முடியாது. அடுத்த தேர்தல்வரும் வரை அவர்களையும் காண முடியாது' என்றார்.
கடந்த காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் நான் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
எனக்கு அதற்கான ஆதரவை வழங்கினார்' என்றும் அவர் கூறினார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026