2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

வன்முறையற்ற தேர்தலை நடத்த ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை தீர்மானம்

Kogilavani   / 2015 ஜூலை 22 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, எவ்வித வன்முறை சம்பவங்களுடம் இடம்பெறாது, அமைதியான தேர்தலை நடத்துவதாக, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் உறுதியளித்துள்ளனர்.

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நேற்று (21) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி உறுப்பினர்கள் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்.

இதன்போது உரையாற்றிய பிரதேச சபையின் தலைவர் ஆனந்த ஜயவிலால்,

'கடந்த வருடங்களில் பல தேர்தல்களுக்கு முகம் கொடுத்தபோதும் தமது பிரதேசத்தில் எவ்வித வன்முறை சம்பவங்களும் இடம்பெறா வண்ணம் அமைதியானதும் நேர்மையானதும் தேர்தலை நடாத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைத்தனர்.

இம்முறை இடம்பெரும் தேர்தலிலும் எவ்வித வன்முறை சம்பவங்களும்  இடம்பெறாது அமைதியான  ஒரு தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாரும் வேண்டிகொள்கிறேன்;. இதற்கமைவாக அனைத்து உறுப்பினர்களும் வன்முறையற்ற தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு உறுதியளித்தனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .