Sudharshini / 2015 ஜூலை 23 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் சாரதியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று (22) உத்தரவிட்டார்.
மேற்படி மாகாணசபைக்கு சொந்தமான ஜீப் வண்டியிலிருந்து 3 கிலோகிராம் கஞ்சாவை பொல்காவையில் வைத்து பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின்போரில் ஜீப் வண்டியின் சாரதியையும் கைதுசெய்தனர்.
சாரதியை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, மேற்படி சாரதிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அவரது சாரதி பதிவியிலிருந்தும் நீக்குமாறு முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபையின் பிரதான செயலாளர் எச்.பி.குலரத்னவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026