Kogilavani / 2015 ஜூலை 23 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
'மாற்றத்துக்கான மலையகம் என்ற தொனிப் பொருளை முன்னிலைப்படுத்தி, பதுளை மண்ணின் வாசனையைக் கொண்ட நான், பொது வேட்பாளராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். எனது வெற்றி உறுதிப்படுத்தப்படும்பட்சத்தில் அனைத்து தமிழ் மக்களுக்குமான சேவை தொடருமென' இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட வேட்பாளர் வி.தேவராஜ் குறிப்பிட்டார்.
பதுளை, தெமோதரையில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'பதுளை மண்ணில் பிறந்து, படித்த, நேர்மையுள்ள ஒருவர் பிரதிநிதியாக வேண்டுமென பதுளை மாவட்டத்தின் அனைத்து தமிழ் மக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். அதற்கமைய, இத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் அனைத்து மலையக மக்களுக்குமான எனது சேவைகள் தொடரும். அரசியல் ரீதியில் சமூக பணியாற்றுவது, மாற்றத்துக்கான மலையகத்தை உருவாக்குவது, அனைத்து மலையக தமிழ் மக்களுக்கும் சேவைகளை விஸ்தரிப்பது என்பன எனது இலக்காகும்.
இவ்வேலைத்திட்டம் கடினமானதென்பதும் எனக்கு தெரியும். ஆனால், அனைத்து சவால்களையும் முறியடித்து மலையகத்தின் அனைத்து நேச சக்திகளையும் அரவணைத்துகொண்டு செயல்பட என்னால் முடியும்' என்றார்.
'ஏனைய வேட்பாளர்கள் போன்று பத்தோடு பதினொன்றாக இருக்க என்னால் இயலாது. மாற்றத்துக்கான மலையகத்தை உருவாக்குவதற்கு உணர்வுபூர்வமாக, முன்மாதிரியாக செயற்படுவதே எனது குறிக்கோளாகும். அடாவடித்தனத்துக்கும் அராஜகத்துக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நான் என்றுமே அடிபணிய போவதில்லை. இத்தகையவைகளை எனது 28 வருடகால ஊடகத்துறை வரலாற்றில் பல முறைகளில் கண்டிருக்கின்றேன்.
எமது மக்களின் விருப்புகள், தேவைகள், அபிலாஷைகள் குறித்து அம்மக்களை சார்ந்தவன் என்ற ரீதியில் எனக்கு நன்கு புரியும். பத்திரிகைதுறை மூலம் எமது மக்களுக்கான சேவைகளை ஆற்றமுடிந்தது. எனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம், எமது மக்களை முழுமையாக அரசியல்மயப்படுத்துவதாகும். இதனடிப்படையில் ஏனைய மக்கள் போன்று எமது மக்களும் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழல் ஏற்படும்' என்றார்.
3 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
09 May 2026