Sudharshini / 2015 ஜூலை 23 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
ஹட்டன் - நுவரெலியா A7 பிரதான வீதியில் தலவாக்கலையில் வேகதடைகள் அமைக்கப்படாததால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பாதசாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை பஸ் நிலையத்திலிருந்து மிடில்டன் கடைத் தொகுதி வரையிலான சுமார் 1 கிலோமீற்றர் பாதையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. வாகனச்சாரதிகள் வாகனங்களை இவ்வீதியில மிகவேகமாக செலுத்துவதால், பாதசாரிகள் மிகுந்த அச்சத்துடனே பாதையை கடக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் பாதசாரிகள் கடவை அமைக்கப்படாமலுள்ளதால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால், கடந்த ஏப்ரல் மாதம், வீதியை கடக்க முற்பட்ட 8 வயது மாணவனொருவர் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில், தலவாக்கலை-லிந்துலை நகரசபையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டு ஒரு வருடங்கள் கடந்துள்ளபோதும் அதற்கு எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து நகரசபை தலைவர் அசோக சே பாலவிடம், வீதியில் பாதசாரி கடவை, வேக தடைகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அவர், A7 வீதியில் வேக தடைகள் அமைக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் இவ்வீதியில் பாதசாரி கடவைகளை அல்லது வேக தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026