Sudharshini / 2015 ஜூலை 23 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சேனாதிராஜா
கண்டி, மடுல்கலையில் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற இருவேறு திருட்டுச்சம்பங்களை தொடர்ந்து, அப்பிரதேசத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன,; மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்பவங்களில் பெறுமதிவாய்ந்த பொருட்கள் மற்றும் 48,000 ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளன.
மடுல்கலை, பரமேஸ்வரா தமிழ் வித்தியாலத்தின் அலுவலக கதவுகள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கணினி, மடிக்கணினி மற்றும் 18,000 ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ்.வாசுதேவன், பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இதேவேளை, மடுல்கலை தோட்ட வைத்தியரின் வீடு உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த கமெரா, ஊசிகள் (ஐதெநஉவழைn) மற்றும் 30,000 ரூபாய் பணம் என்பவை திருடப்பட்டுள்ளதாக வைத்தியர் முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டையடுத்து, இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026