Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 599 பேருக்கும் மொத்த சம்பளமாக 23,500 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தான் தயங்கப்போவதில்லையென ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
உதவியாசிரியர்களுக்கான சம்பள விடயம் தொடர்பில் பதுளையில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'ஏனைய மாகாணங்களில் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களின் சம்பள விவகாரம், அந்தந்த மாகாணங்களின் தமிழ்க்கல்வி அமைச்சர்கள் மூலமாக தீர்க்கப்பட வேண்டிதொன்றாகும்.
இந்த சம்பள உயர்வு விடயம் தேர்தலுக்காக கூறும் விடயமல்ல. கடந்த மே மாதம் 19ஆம் திகதி, ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட்டதிலிருந்தே இச்சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தேன். அதன் பயனாகவே இச்சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏனைய மாகாணங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியது குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள தமிழ்க்கல்வி அமைச்சர் மற்றும் அதற்கு பொறுப்பான ஏனைய அமைச்சர்கள் ஆகியோரின் கடமையாகும். ஆனால், அதற்கு திராணியில்லாமல் தேவையற்ற அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருப்பது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது.
ஆசிரிய உதவியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 6,000 ரூபாய், வாழ்க்கைச் செலவு புள்ளியாக 7,500 ரூபாய், நல்லாட்சியின் சம்பள உயர்வாக 10,000 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக 23,500 ரூபாயை பெற்று கொடுக்க முடிந்தது.
எனவே, தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகைளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரதான தொழிற்சங்கமொன்று பரப்பி மக்களை குழப்பியடித்து வருகின்றது. எனவே, நான் உறுதியளித்தபடி நிச்சயமாக 23,500 ரூபாய் சம்பளத்தை
ஆசிரியர் உதவியாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் பதவி துறப்பேன் என்ற உறுதிமொழியை வழங்குகின்றேன்' என்றார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026