Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, கழகத்தின் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்
தமிழர் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம், ஹட்டன், அஜந்தா விடுதியில் புதன்கிழமை(22) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
'தமிழ் முற்போக்கு கூட்டணியிடம்; நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், லயன் வாழ்க்கை முறையை ஒழிக்கவேண்டும், தனிவீட்டுத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும், தோட்டங்களை நவீன கிராமங்களாக மாற்ற வேண்டும், தோட்ட உட்;கட்டமைப்பு அமைச்சை தக்கவைத்துகொள்ள வேண்டும், தரிசு மற்றும் கைவிடப்பட்ட நிலங்களை பயிர்செய்கைக்காக மலையக தொழிலாளர்களுக்கு கையளிக்கவேண்டும் போன்ற 23 கோரிக்கைகள் உள்ளடங்குகின்றன.
இக்கோரிக்கைகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு இணங்கியமைக்கு அமைய எமது மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் நுவரெலியா, கண்டி, கொழும்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்;பாளர்களை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தமிழர்களை அதிகரிக்க செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணயின் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025