Kogilavani / 2015 ஜூலை 25 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
'எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் 100 முதலீட்டாரர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைகீழாக நின்று கூறினாலும் எதிர்வரும் பொதுதேர்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டி, அக்குறணையில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்தே மஹிந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே கூட்டமைப்பின் தலைவர். தேர்தலில் மஹிந்த வென்றாலும் பிரதமர் பதவி வழங்கப்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பகிரங்கமாகவே கூறியுள்ளார். இதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வாக்களித்த பெரும்பாளானோர் இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவுள்ளனர்.
எனவே இம்முறை மஹிந்த தலைகீழாக நின்று கூறினாலும் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறப்போவதில்லை. அவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் வீண்விரையமாகும்' என்று கூறினார்.
'கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு உறிய பாதுகாப்பு வழங்குவதுடன் அவர்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படும் என்றார்.
'நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தற்போதைய முக்கிய தேவையாக உள்ளதால் நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் குறுகிய காலத்தில் அதிகமாக தேவைப்படுகிறது.
என்வே எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் 100 முதலீட்டாரர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.



6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026