Kogilavani / 2015 ஜூலை 26 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளி மக்களின் பிள்ளைகள் நாட்டை ஆளமுடியாதா?, நிச்சியமாக முடியும். அதற்கு நல்ல கல்வி தகைமையும் விடாமுயற்சியும் தேவை என முன்னாள் அமைச்சரும் மூத்த கல்வி சிந்தனையாளருமான பி.பி. தேவராஜ் கூறினார்.
'உலகில் ஒவ்வொரு நொடியும் எத்தனையோ மாற்றங்கள் நடக்கின்றன. இந்தியா உட்பட பல நாடுகள் எத்தனையோ கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் நாள்தோறும் உலகுக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், எமது சமூகம் இன்னும் எங்கே நிற்கின்றது' என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்திய வம்சாவளியினரின் அபிவிருத்தி அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'சமூக அணித் திரட்டல்' நிகழ்வு சனிக்கிழமை (25) பண்டாரவளை, ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, பி.பி தேவராஜினால் எழுதப்பட்ட 'இந்திய வம்சாவழித் தமிழர்களின் பின்னணியும் சவால்களும்' எனும் நூல் வெளியிடப்பட்டது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிகள் பற்றிய விளக்கங்களையும் அவற்றை எவ்வாறு தொடரவேண்டும் என்பது தொடர்பிலும் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி விளக்கினார்.
இலங்கைவாழ் இந்தியவம்சாவளி மக்களின் பழைமையான சமூக அடிமைத்தனங்களையும் பொருளாதார, கல்விப் பின்னடைவுகளையும் தகர்த்தெரிந்து, அவர்களையும் அவர்களின் எதிர்;கால சந்ததிகளையும் முன்னேற்றப் பாதையில்; இட்டுச் செல்வதற்காக, ஹல்தும்முல்லை பிரதேசசெயலக பிரிவில் வாழும் அரச உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தனியார் நிறுவன தொண்டர்கள் என பல இளஞர்களின் உத்வேகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே இந்தியவம்சாவளியினர் அபிவிருத்தி அமைப்பாகும்(DOIO).
இவ்வாறான மாற்றங்களுக்கு பெரும் பங்களிப்பை வழங்கக் கூடிய பிரதான மார்க்கம் கல்வித்துறையே என்பதை நன்கறிந்த இவ்வமைப்பு, வருடாந்தம் பல கல்விச் செயன்முறைப் பயிற்சிகளையும் கருத்தரங்குகளையும் ஏற்பாடுசெய்து வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.
இவற்றின் இன்னுமொருகட்டமாக, புதிய கல்வித் திட்டங்களினூடாகவும் கருத்தாடல்கள் மூலமாகவும் நம் இளைய சமுதாயத்தை ஊக்குவித்து அணித்திரட்டிச் செல்லும் நோக்குடன் இச்சமூக அணித் திரட்டல் நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டது.
இநநிகழ்வில், முன்னாள் அமைச்சரும் மூத்த கல்விச் சிந்தனையாளருமான பீ.பீ.தேவராஜ், சிறப்பு விருந்தினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான யசோதரா கதிர்காமத்தம்பி, அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய பிரதான குருக்கள், முன்;னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சுதானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026