Sudharshini / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
'யதார்த்தமும் நடைமுறை அரசியலும் தெரியாத வலுவிழந்த அரசியல் வாதிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் ஓரங்கட்டப்படுவார்கள்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான அமைச்சர் பி.திகாம்பரம் , இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் , மற்றும் திலகராஜ் ஆகியோரை ஆதரித்து டிக்கோயா காசல்ரீ விருந்தகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'மக்கள் நாட்டின் ஆட்சிகுறித்து இன்று மிகத்தெளிவாக உள்ளனர். இதற்கு பிரதான எதிரியாக செயற்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி இனவாதம் பேசி வாக்குகளை பெற எத்தனிக்கின்றார். இன்று இனவாதம் என்பது மக்கள் மத்தியில் வேண்டப்படாத ஒன்றாக காணப்படுகின்றது.
அதனாலேயே, கடந்த ஜனவரி 8ஆம் திகதி மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். அதற்காக நாமும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிக்கு பூரண ஆதரவை தெரிவித்;து மலையகத்தில் மிகப் பெரிய அலையை ஏற்படுத்தினோம்.
நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த போது, தமிழ் மக்களின் எதிரியாக செயற்படுகின்ற மஹிந்தவை, ஆதரித்து வாக்கு சேகரித்த குழுக்கள் தற்போது மறைமுகமாக அவரை கொண்டுவர எத்தனிக்கின்றனர். எமது கூட்டணியால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி மைத்திரியின்; படத்தினை வைத்துக்கொண்டு தற்போது வாக்குப்பிச்சை கேட்கின்றனர்.
இவர்களின் செயற்பாடு உண்மையில் வேடிக்கையாக உள்ளது. காரணம்; எதிர்வரும் நாடாளுமன்றம் பலம் வாய்ந்த ஒன்றாக மாறப்போகின்றது. அதன் பிரதான பலம் மற்றும் நாட்டின் ஆளுமை பிரதமர் கைகளுக்கு செல்லவிருக்கின்றது. எனவே, எமது எதிர்கால பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றோம். எதிர்வரும் ஆட்சியிலும் நாம் முக்கிய பங்காளராகப் போகின்றோம்' என அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago