Sudharshini / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பண்டாரவளை பகுதியில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 20 வயதான மாணவியொருவரிடம் பாலியல் சேஷ்ட்டையில் ஈடுபட்ட பிரித்தானிய இளைஞரை எல்ல பொலிஸார் சனிக்கிழமை (08) கைதுசெய்துள்ளனர்.
குறித்த மாணவி, பண்டாரவளையில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு, எல்லையிலுள்ள தனது வீட்டுக்கு பண்டாரவளையிலிருந்து இ.போ.ச. பஸ் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.
அச்சமயம் மேற்படி பஸ்ஸில் ஏறிய பிரித்தானிய பிரஜையான குறித்த இளைஞன், அம்மாணவியின் அருகில் சென்று அமர்ந்து தவறான முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த மாணவி, ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த எல்ல பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, எல்ல பொலிஸார் அவ்விளைஞனை கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அவ்விளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago