Sudharshini / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்டத்தில் சுயட்சைக்குழுவில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படமும் விருப்பு இலக்கங்கள் பொறிக்கப்பட்ட கலண்டர்களுடன் மூவரை நேற்று (12) கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா லக்கம் தோட்ட பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த வானை, மஸ்கெலியா லக்கம் பகுதியிலுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து சோதனைக்குட்படுத்திய போதே இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கலண்டர்களை மீட்டுள்ளதுடன் குறித்த வானையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றில் பெரியளவிலான 176 கலண்டர்களையும் சிறியளவிலான 773 கலண்டர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு மாகந்துர பகுதியையும் சேர்ந்தவர் எனவும் ஏனைய இருவரும் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவராவர்கள் எனவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago