2026 மே 09, சனிக்கிழமை

ஆலயத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

நானுஓயா  கிளாரண்டன் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து அங்கிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களை கொள்ளையிட  முயற்சிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்   வியாழக்கிழமை, நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாலயத்திலிருந்த பெறுமதிவாயந்த பொருட்கள் மற்றும் அம்மன் கழுத்திலிருந்த தாலி என்பவற்றை முன்கூட்டியே ஆலய நிர்வாகத்தினர் பாதுகாப்பான இடத்தில் வைத்ததால் கொள்ளையர்களின் இம்முயற்சி வீணாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயம் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த நபரொருவர், ஊர் மக்களுக்க தகவல் வழங்கியதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .