Kogilavani / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
எமது ஒற்றுமைக்கும் சேவைக்கும் கூட்டணி உறுப்பினர்கள் மூவருக்கும் வாக்களித்து வெற்றி பெறச்செய்த நுவரெலியா மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'மக்களுக்கு உரிய சேவைகளை செய்தால் மக்கள் அவர்களை நிராகரிக்க மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டி உள்ளன. தேர்தல் வரலாற்றில் சரித்திரம் படைத்த தேர்தலாகவே இதனை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் எனது அரசியல் பிரவேசத்துக்கு வழியமைத்த மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானையும் மலையக மக்கள் முன்ணணியின் மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனையும் நன்றி உணர்வுடன் நினைவு கூறுகின்றேன்.
வெற்றிப்பெற்று விட்டோம் என்பதை விட வெற்றியின் பின் என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியமானதாகும். புதிய அரசாங்கத்தினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது ஆதரவுடனும் எமது மக்களுக்கு செய்யக்கூடிய அனைத்து சேவைகளையும் செய்வதற்கு எமது முற்போக்குக் கூட்டணி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை இந்நேரத்தில் கூற விரும்புகின்றேன்' என அவர்
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago