2026 மே 05, செவ்வாய்க்கிழமை

மாணவனின் கையை பதம்பார்த்த கத்தி

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 நாட்களே இருக்கின்ற நிலையில், மாணவனொருவர், விறகு வெட்டச்சென்று, தனது இடதுகையை எதிர்பாரதவிதமாக கத்தியால் வெட்டிக்கொண்ட சம்பவம் நோர்வூட், எல்படையில் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த ரஞ்சன் ஹரிஸ் என்ற 10 வயது மாணவனே, தனது இடதுகையை வெட்டிக்கொண்டுள்ளார். இம்மாணவன் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கத்திவெட்டில், இடதுகை தொங்கிய நிலையில், இச்சிறுவன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .