Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, தலாதுஓயா பகுதியில் உள்ள அழகு கலை நிலையத்துக்குச் சென்ற ஆடைத்தொழிற்சாலையில் வேலை பார்க்கும் யுவதியொருவர், நேற்று வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதுடைய ஷமின்தி தினுஷா சமரகோன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மையில் திருமணம் செய்ய இருந்தமையினால் தன்னை அழகுபடுத்துவதற்காக மேற்குறிப்பிட்ட அழகு கலை நிலையத்துக்குச் சென்று, அதற்கான அழகு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது, குறித்த யுவதி மயக்கமடைந்து விழுந்துள்ளதாகவும் உடனடியாக கண்டி வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், கண்டி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago