Gavitha / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடையில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தது மட்டுமன்றி அவர்களை கேலி செய்யும் வகையில் அவர்களின் படங்களை முகப்புத்தகத்தில் தரவேற்றம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை- இரத்தினபுரி வீதியில் எல்லேஆராவ பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) கடமையில் இருந்தவர்களின் புகைப்படங்களே முகப்புத்தகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முகப்புத்தகத்தில் பொலிஸாரின் படங்களை தரவேற்றம் செய்துள்ள குறித்த சந்தேகநபர், தலைகவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுள்ளார். அவரை வழிமறித்த போக்குவரத்து பொலிஸார் அவருக்கு தண்ட பற்றுச்சீட்டையும் கையளித்துள்ளனர்.
அந்த சந்தேகநபரிடம் அச்சந்தர்ப்பத்தில் வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை. அப்போது, சந்தேகநபர் அந்த பொலிஸாரை தூற்றியது மட்டுமன்றி, அவர்களை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்திலும் ஏற்றியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள், தன்னிடம் இலஞ்சம் கேட்டதாகவும் அதனை தான் வழங்குவதற்கு மறுத்துவிட்டதாகவும் அந்த முகப்புத்தகப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை, கைது செய்த பொலிஸார் அவரை, பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் நீதவான் விடுதலை செய்துள்ளார்.
அந்த நபருக்கு எதிராக பொலிஸார், நட்டஈடு கோரி சிவில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
58 minute ago