Janu / 2026 ஜனவரி 22 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா,பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலே ஸ்டெத்ஸ்பி தேயிலைத் தோட்டத்திற்கு மேல் பகுதியில் உள்ள காப்புக் காட்டுக்குள் சட்டவிரோத கசிப்பு தயாரித்து வந்த ஒருவர், மஸ்கெலியா பொலிஸாரால் புதன்கிழமை (21) இரவு நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்
இதன்போது 210 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குறிப்பிடத்தக்க காலமாக இந்த சட்டவிரோத கசிப்பு தயாரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஸ்டெத்ஸ்பி தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரை எதிர்வரும் 28ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
காமினி பண்டார இளங்கந்திலக

26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago