R.Tharaniya / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காலி முகத்திடலில் வைத்து தமது பயணத்தை ஆரம்பித்தவர் இன்றுடன் 10 ஆவது நாளாகிய புதன்கிழமை (9) வாழைச்சேனையை வந்தடைந்துள்ளார். வாழைச்சேனை வந்தடைந்ததும் அன்னை அறக்கட்டளை அமைப்பினரால் பொன்டை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் வரவேற்கப்பட்டார்.
அவர் தமது பயணத்தை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஊடாக மீண்டும் ஆரம்பித்த இடத்தை சென்றடையவுள்ளார். அவர் மூன்று கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து தமது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதில் ஒன்று மலையகக்களை தோட்டக்காட்டான் என்று மட்டம் தட்டலை நிறுத்துதல்,அவ்வாறு இழிவுபடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்,
வெளிநாடுகளுக்கு செல்லும் எமது நாட்டு பெண்களுக்கு சரியான கவனிப்பு,பராமரிப்பு இல்லை,தகுந்த பாதுகாப்பு இல்லை அதனை ஜனாதிபதி தலையிட்டு அவர்கள் நலனில் அக்கறை கொள்ளச் செய்தல், தன்னைப் போன்ற சாதனையாளருக்கு சரியானதொரு அங்கீகாரம் என்பன வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமது உலக சாதனை நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஆர்.ஜெயஸ்ரீராம்

8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago