Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், நுவரெலியா மாவட்டத்தில் 13 தோட்டங்களில் 235 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைவாக, கிரேக்லி தோட்டத்தில் 30 வீடுகள், டெலிக்கியர் சென். அண்ட்ரூஸ் பிரிவில் 20 வீடுகள், தலவாக்கலை பெரிய கட்டுக்கலையில் 20 வீடுகள், உடரதல்ல தோட்டத்தில் 30 வீடுகள், நுவரெலியா மேற் பிரிவில் 15 வீடுகள், மாக்கஸ் தோட்டம் கீழ் பிரிவில் 15 வீடுகள், மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் 20 வீடுகள், கிலனோஜி டீ சைட் பிரிவில் 15 வீடுகள், பெயர்லோன் பாகனி பிரிவில் 15 வீடுகள், பெயர்லோன் பிளேயரோன் பிரிவில் 15 வீடுகள், கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் 25 வீடுகள் மற்றும் லோகி சென்கூம்ஸ் பிரிவில் 15 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மலைநாட்டு புதிய கிராமங்களள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago