Editorial / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான நிலை 3 சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.
வௌ்ளிக்கிழமை (19) அன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, 32 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 2 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் 18 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் மினிபே, உடதும்பர, தொழுவ மற்றும் மெததும்பர ஆகிய எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, வலப்பனே, ஹங்குரன்கெத்த மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நிலை 3 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
, பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகல பசறை மற்றும் ஹாலி எல, அக்குரண பாத்ததும்பர, உடுநுவர, கங்காவட கோரளை, பஸ்பகே கோரளை, ஹரிஸ்பத்து, தும்பனை, பன்வில, கங்கைஇஹல கோரளை, உடபலாத, யட்டிநுவர, குரளத்தஹே, பதுளை மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் ஹதரலியத்த, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் லக்கல பல்லேகம, வில்கமுவ, யதவத்தை, அம்பங்கங்க கோரளை. நாவுல, ரத்தோட்ட, பல்லேபொல, உக்குவெல மற்றும் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளும்,
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) 19 ஆம் திகதி காலை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது, மேலும் 20 ஆம் திகதி காலை வரை 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும்.
மூன்றாவது நிலை சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால், மழை தொடர்ந்தால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கூறுகிறது.
இரண்டாம் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவும், முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்ட பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவும் பதிவாகியுள்ளதால், மழை தொடர்ந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களை வலியுறுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .