Freelancer / 2022 மே 28 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனா
மடூல்சீமை - பிட்டமாறுவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் விரைந்து சென்ற பொலிஸார் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட னர்.
இதன்போது, குறித்த வியாபார நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் பெற்றோல் கொள்கலன்கள் 12 மீட்கப்பட்டதோடு, மொத்தமாக 240 லீற்றர் பெற்றோலை பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். (R)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago