2025 மே 13, செவ்வாய்க்கிழமை

26 புதிய பஸ்கள் கையளிப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்கள், ஞாயிற்றுக்கிழ​மை (09) கையளிக்கப்பட்டன.

நுவரெலியா டிப்போவின் கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ஏழு பஸ் டிப்போகளுக்கே இவை வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கான உத்தியோகபூர்வ வைபவம்,  நுவரெலியா கிரகறி வாவி கரையில் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொண்டார், அத்துடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் பி .திஸாநாயக்க , சீ பி . ரட்னாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பஸ் டிப்போ அத்தியட்சகர்கள்,டிப்போ ஊழியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்

                                                                                                                                         டி.சந்ரு

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X