Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா. யோகேசன்
சீரற்ற வானிலையால் கினிகத்தேனை -பிளக்வாட்டர் தோட்டத்தில் நேற்று முன்தினம் (1) ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 24 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்திரையார் ஆலயத்தில் பாதுகாப்பு தங்கவைக்கப்பட்டிருந்தனர். இருந்த போதும் தற்போது வெள்ள நீர் வீடுகளில் வடிந்துள்ளதால் தமது சொந்த குடியிருப்புகளுக்கு சென்றுள்ளனர்.
எனினும் இம்மக்கள் வெள்ளத்தால் தமது உடமைகளை இழந்துள்ளதாகவும் மாணவர்களின் புத்தகங்கள், தமது ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை வெள்ளநீர் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட நேற்று (2) குறித்த பகுதிக்கு கிராம உத்தியோகத்தரும் சமுர்த்தி உத்தியோகத்தரும் வருகை தந்த போதிலும் மக்களின் எதிர்ப்பின் காரணமாக இருவரும் திரும்பிச் சென்றனர்.
ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் எனவே எதிர்வரும் காலத்தில் ஆற்றை அகலப்படுத்தாமல் இத்தோட்டத்திற்குள் எவரும் வர வேண்டாம் என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டின் போதே, குறித்த அதிகாரிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து வெளியேறி சென்றதாக மக்கள் தெரிவித்தனர்.
தாம் தொடர்ந்து 27 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றோம்.பல அரசியல்வாதிகள் இப்பிரச்சினைக்கு தீர்வு தருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.இருப்பினும் தமக்கு இதுவரை உரிய தீர்வு தரப்படவில்லை.
மாற்று திட்டமாக எமக்கு வேறொரு இடத்தில் வீட்டு திட்டத்தை நிர்மாணித்து தாருங்கள் அல்லது எமக்கு காணியை தாருங்கள் என தொடர்ச்சியாக 27 வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தாலும் இதுவரை எவரும் நிறைவேற்றவில்லை என தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .