Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
மஸ்கெலியா பிரதேச சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம், எதிர்வரும் புதன்கிழமை (28) முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அழைப்புக் கடிதங்கள், தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம், தலைவர், உபதலைவர் தெரிவுகளும் இடம்பெறவுள்ளன.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு, மவுசாகலை, பிரவுன்லோ, சீத்தகங்குல, மரே, பிரன்ஸ்விக், மஸ்கெலியா, மகாநிலு, அப்கொட், தெய்வகந்தை மற்றும் தம்பேதன்ன ஆகிய 10 வட்டாரங்களிலிருந்து, விகிதாசார முறையில், 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 வட்டார உறுப்பினர்கள் மற்றும் ஒரு விகிதாசார உறுப்பினரோடு மொத்தமாக 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago