2025 ஜூலை 21, திங்கட்கிழமை

’’3 நாள்கள் மாத்திரம் வேலை வேண்டாம்’’

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா  , ராமு தனராஜா       

பலாங்கொட பிளாண்டேஷனால் நிர்வகிக்கப்படும்  பசறை- யூரி காரியாலய டிவிஷன் தொழிலாளர்கள் இன்றையதினம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தோட்ட நிர்வாகம் கிழமையில் 3 நாள்கள் மாத்திரமே தொழில் தருவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே யூரி தோட்ட காரியாலய பிரிவு மக்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனைய நாட்களில் ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 40 ரூபாய் வீதம் தருவதாகவும் ஒருநாள் சம்பளம்1000 ரூபாய் பெறவேண்டுமேயானால் 18 கிலோ கிராம் தேயிலை கொழுந்து பறித்தாக வேண்டுமென்று நிர்வாகத்தால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .