2025 மே 12, திங்கட்கிழமை

3 வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை

Janu   / 2023 ஜூலை 25 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா

மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அவருடைய மனைவி கொழும்பில் வேலைச் செய்து வருகின்றார். அவருடைய ஆறு குழந்தைகளையும், அவரது அம்மாவே கவனித்து வருகின்றார்.

எனினும், மதுபோதையில் வந்த 6  பிள்ளைகளின்   தந்தையே  தனது  6 ஆவது  பிள்ளையின்  மீது  கொதி நீரை ஊற்றியுள்ளார்.  சம்பவத்தில்  படுகாயமடைந்த  குழந்தை,  லிந்துலை   பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சம்பவம்  தொடர்பான விசாரனைகளை  லிந்துலை  பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர். 

பிள்ளை  மீது கொதி நீரை ஊற்றிய  நபர்  பிரிதொரு  வழக்கில்  ஆஜராக  நுவரெலியா மாவட்ட  நீதிமன்றத்திற்கு  சென்றுள்ளதாகவும்  அவ்விடத்திலே  அவரை  கைது செய்வதற்கான  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X