Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த அப்பியாசப் கொப்பிகள் இந்தியாவினால் இலவசமாக வழங்கப்பட்டன. ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 மாணவர்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த வைபவம் ஹட்டன், கிருஷ்ணபவான் மண்டபத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது.
தேவையான அப்பியாசக் கொப்பிகள், இந்தியா, சென்னை நகரிலுள்ள விலங்கு வைத்திய பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பை ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் முன்னாள் தவிசாளர் அங்கமுத்து நந்தகுமார் மேற்கொண்டிருந்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் பங்கேற்று, அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைத்தார்.
ரஞ்சித் ராஜபக்ஷ


3 minute ago
42 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
48 minute ago
57 minute ago