2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

306 பேருக்கு 15ஆம் திகதி நியமனம்

Freelancer   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ், கே.சுந்தரலிங்கம்

ஆசிரியர் உதவியாளராக சேவையாற்றி வந்த 306 பேருக்கு எதிர்வரும் 15ஆம் திகதி நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

உப தலைவர் கணபதி கனகராஜ் வெளியிட்ட ஊடக அறிக்ககையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயின் வழிகாட்டலுக்கமைவாக  ஆசிரியர் உதவியாளராக சேவையாற்றி வந்த அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. 
 
பெருந்தோட்ட பாடசாலைகளில்  ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த  ஐந்து வருடங்களுக்கு முன்னர் 3,000 உதவி ஆசிரியர் நியமனங்கள் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

குறித்த நியமனங்கள் அடிப்படை தகைமைகளை பூரத்தி செய்த பின்னர் நிரந்தரமாக்கப்படும் என நிபந்தினையின் அடிப்படையிலேயே குறித்த ஆசிரியர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். 

எனினும், அவர்களின் தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 
 
உதவி ஆசிரியர்கள் கடந்த  ஐந்து வருடங்களுக்கு மேலாக ஆராயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தில் மிக கஷ்டமான நிலையிலே சேவையாற்றி வந்துள்ளனர். 

அந்த வகையில் அவர்களுடைய பிரச்சினைகளை காலத்துக்குக் காலம் எடுத்துச் சென்று வலியுறுத்தியமையினால் சிறிது சிறிதாக நியமனங்களை வழங்கப்பட்டிருந்தன. 

மேலும், எஞ்சியுள்ள நியமனங்ளை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த நியமனங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X